மதுரையில் இருந்து கேரளாவுக்கு 15 கிலோ கஞ்சா கடத்திய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மதுரையில் இருந்து கேரள மாநிலத்திற்கு தென்காசி மாவட்டம் வழியாக வாகனம் ஒன்றில் கஞ்சா கடத்தி செல்லப்படுவதாக நேற்று இரவு தென்காசி மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்ட தனிப்படை உதவி ஆய்வாளர் வேல்முருகன் தலைமையில் பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வந்தன இதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலை சிவகிரி சோதனை சாவடியில் வாகன தணிக்கை நடைபெற்றது அப்பொழுது கேரள மாநிலத்திற்கு உருளைக்கிழங்கு ஏற்றி வந்த பிக்கப் வாகனத்தில் சோதனை நடைபெற்றதில் உருளைக்கிழங்கு மூடைகளின் கீழ் அடிப்பாகத்தில் சுமார் 105 கிலோ கஞ்சா பொட்டலங்கள் நூதனமான முறையில் பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது இதன் தொடர்ச்சியாக புளியங்குடியைச் சார்ந்த நபரும் கேரள மாநிலம் எர்ணாகுலத்தைச் சார்ந்த நபரையும்பிடித்து போலீசார் விசாரணை செய்ததில் கேரள மாநிலத்தில் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக கஞ்சா கொண்டு செல்வது தெரிய வந்தது இதன் தொடர்ச்சியாக அவர்கள்
எர்ணாகுளத்தைச் சார்ந்த சியாக் என்பதும், புளியங்குடியை சேர்ந்த முருகானந்தம் என்பதும் என தெரியவந்தது மேலும் முருகானந்தம் கஞ்சாவை வாங்கி மொத்தமாக கேரளா மாநில வியாபாரிகளுக்கு கொடுப்பதும் விசாரணையில் தெரியவந்தது தொடர்ந்து இரண்டு நபர்களையும் போலீசார் கைது செய்து 15 கிலோ கஞ்சா மற்றும் உருளைக்கிழங்கு ஏற்றி வந்த வாகனம் உருளைக்கிழங்கு மூடைகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Tags :