மான் வேட்டையாடியதற்காக மூன்று லட்சம் அபராதம் விதித்து வனத்துறை அதிரடி.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தென்காசி மாவட்டம் மத்தளம் பாறை பகுதியில் கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி உட்பட்ட வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருக்கும்போது மானை வேட்டையாடியதற்காக நேற்று முன்தினம் குற்றாலம் குடியிருப்பைச் சார்ந்த தங்கப்பாண்டி மகன் கணேசன் என்பவரை வனத்துறையினர் பிடித்து விசாரணை செய்து ஒரு லட்சம் அபராதம் விதித்தனர்
இந்த நிலையில் அது தொடர்பாக மேலும் காசி மேஜர் புரத்தைச் சார்ந்த செண்பகம் மற்றும் மின்நகரைச் சேர்ந்த பிரபுராஜா இருவரையும் கைது செய்து தலா ஒரு லட்சம் வீதம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகப்பிரியா உத்தரவின் பேரில் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இதில் தொடர்புடைய சிலரை தேடி வருவதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
Tags :