கார்த்திக் சிதம்பரத்தின் காரைக்குடி அலுவலகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல்
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரத்தின் காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் உள்ள அலுவலகத்தில் அதிகாலை மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். அடையாளம் தெரியாத நபர்கள் அலுவலக வளாகத்திற்குள் இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் ஒன்று அலுவலகத்தின் முன் பகுதி விழுந்து வெடித்து தீ பிடித்தது மற்றொன்று அருகில் உள்ள புல்வெளியில் விழுந்து வெடிக்கவில்லை என்றும் இந்த தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை .ஆனால் தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்த சிசிடிவி கேமராவை சேதப்படுத்திவிட்டு தப்பித்து சென்றுள்ளனர். சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மர்ம நபர்களை அடையாளம் காண அருகில் உள்ள பிற கட்டிடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையின் ஆய்வு செய்து வருகின்றனர் .கார்த்திக் சிதம்பரம் சமீபத்தில் ஈரான் குறித்து வெளியிட்ட சில கருத்துக்களுக்கு எழுந்த எதிர்ப்புகள் காரணமாக இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது.
Tags :



















