கைது செய்யப்பட்ட டி.எஸ்.பி.நீதிபதியின் காரில் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் தப்பி ஓட்டம்.

காஞ்சிபுரம் சட்டம் ஒழுங்கு டிஎஸ்பி சங்கர் கணேஷ், ஒரு வன்கொடுமை வழக்கில் நடவடிக்கை எடுக்காததால், அவரை கைது செய்ய காஞ்சிபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, செப்.22 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில், நீதிமன்றத்திலேயே அவர் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, நீதிபதியின் காரில் அழைத்துச் செல்லப்பட்ட சங்கர் கணேஷ் சிறை வாசலில் இருந்து போலீஸ் ஜீப்பில் ஏறி தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags : கைது செய்யப்பட்ட டி.எஸ்.பி.நீதிபதியின் காரில் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் தப்பி ஓட்டம்.