வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஆதாரை 12வது ஆவணமாக கருத வேண்டும் - உச்ச நீதிமன்றம்.

by Staff / 08-09-2025 09:20:43pm
வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஆதாரை 12வது ஆவணமாக கருத வேண்டும் - உச்ச நீதிமன்றம்.

ஆதார் சட்டப்பூர்வ அந்தஸ்தை பெற்றிருந்தாலும் அது குடியுரிமைக்கான சான்று அல்ல; ஆனால் அடையாளத்திற்கான ஆவணம்.மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 23(4)இன் படி ஒரு நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணம் ஆதார்.பீகார் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான வழக்கில், வாக்காளர் பட்டியலில் விபர சரிபார்ப்புக்கு ஆதார் அட்டையை 12வது ஆவணமாக கருத தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.எனினும், ஆதார் விபரங்களின் உண்மைத்தன்மையை உறுதிபடுத்த தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு என்பதை தெளிவுபடுத்தியதுடன், ஆதார் குடியுரிமைக்கான சான்றாக ஏற்றுக் கொள்ளப்படாது எனவும் தெரிவித்துள்ளது.

 

Tags : வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஆதாரை 12வது ஆவணமாக கருத வேண்டும் - உச்ச நீதிமன்றம்.

Share via