துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

by Staff / 23-10-2022 04:26:42pm
துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை  அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து உள்ளது. அது வடதிசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை புயலாக வலுப்பெறக்கூடும் என்றும், வருகிற 25-ந் தேதி அதிகாலை வங்கதேச கடற்கரையில் கரையை கடக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி வ. உ. சி. துறைமுகத்தில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. தூத்துக்குடி வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக மன்னார் வளைகுடா பகுதியில் நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo