1,65,000 பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம்

by Staff / 22-10-2022 04:06:44pm
 1,65,000 பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம்

தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் 16 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுதவிர தனியார் பேருந்துகள் பலவும் முழுவதும் புக் ஆகியுள்ளது. சென்னை, கோவை, திருப்பூர் போன்ற ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னை ஜிஎஸ்டி சாலையில் நேற்று மாலையில் இருந்து இன்று காலை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் தீபாவளியையொட்டி, 3,300 அரசுப் பேருந்துகளில் இதுவரை 1,65,000 பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அரசுப் பேருந்துகளில் செல்ல 1,66,659 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர் எனவும் போக்குவரத்துத்துறை தெரிவித்திருக்கிறது.

 

Tags :

Share via