இந்தியா என பெயர் சூட்டிய பாகிஸ்தான் தம்பதி
பாகிஸ்தானை சேர்ந்த ஓமர் இசா என்பவர், தனது மகனுக்கு இந்தியா என பெயர் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவர், என் மகனின் உண்மையான பெயர் இப்ராஹிம். நான் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவன். எனது மனைவி வங்கதேசத்தை பூர்வீகமாக கொண்டவர். எங்களுக்கு நடுவில் படுத்திருக்கும் எங்கள் மகனுக்கு இந்தியா என பெயர் சூட்டியுள்ளோம். பாகிஸ்தானியருக்கும், வங்கதேசத்தவருக்கும் நடுவில் படுத்திருப்பதால் எங்கள் மகன் பெயர் இந்தியா. இந்தியா எனது வாழ்க்கையில் பிரச்சனையை ஏற்படுத்துகிறான் என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
Tags :