தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்

by Admin / 04-10-2026 12:28:42am
தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்

தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும்திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் பிரச்சாரத்தின் பொழுது தமிழக வெற்றிக்கழக சார்பாக போட்டிகள் சத்தியபாமா ஏற்கனவே அண்ணா திமுகவில் போட்டியிட்டு 12 நாட்களுக்குள் தன்னுடைய சட்டமன்ற பதவியை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் வேறு ஒரு கட்சி வேட்பாளராக இங்கே களம் காணுகிறார் என்றும் நேற்று தாராபுரத்தில் பிரச்சாரத்திற்கு வந்த முதலமைச்சர் வழக்கமாக சட்டமன்றத்திலும் வேறு பிரச்சார மேடைகளிலும் கத்து கத்து என்று கத்துவார். .ஆனால் நேற்று நடித்துவிட்டு சென்றுள்ளார் என்றும் சட்டமன்றத்தில் முதலமைச்சரிடம் கேள்வி கேட்டால் மௌனமாக இருப்பதாகவும் நான் சட்டமன்றத்தில் பல கேள்விகள் கேட்டிருக்கிறேன். ஆனால் , எதற்கும் பதிலளிக்கவில்லை என்றும் அமைச்சர்கள் பாட்டு பாடி கொண்டு இருக்கிறார்கள் அமைச்சர்களுடைய பெயர் முதலமைச்சருக்கே தெரியுமா என்று தெரியவில்லை நாங்கள் எல்லாம் அவர்களை பட்டப்பெயர் வைத்து தான் அழைக்கிறோம் என்றும் அந்தப் பெயர்களை வாசித்து காட்டி விமர்சித்தார். சட்டமன்றத்தில் தம் தொகுதியின்  பிரச்சனைகளை குறித்து பேசாமல் பாட்டு பாடுவது போல் முதலமைச்சர் முகம் தெரியவில்லை என்று சட்டமன்றத்திற்குள்ளே தொலைக்காட்சியை பெட்டியை வைக்க வேண்டும் என்றும் அதிமுக சார்பாக சத்தியபாமா போன்று திமுக வேட்பாளர் சுகன்யா பல்டி, அந்தர்பல்டிஅடிக்க மாட்டார். அவர் நன்கு படித்தவர் வழக்குரைஞர் உங்கள் தொகுதிக்காக பல்வேறு திட்டங்களை பெற்றுத் தருவார் என்று பேசினார்.

தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்
 

Tags :

Share via

More stories

Logo