துருக்கிய ஹோட்டல் அறையில் ரஷ்ய தூதர் மரணம்
துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள தனது ஹோட்டல் அறையில் ரஷ்ய தூதர் நிகோலாய் கோப்ரினெட்ஸ் இறந்து கிடந்தார். தூதர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த அவர், அறையை விட்டு வெளியே வராததால், ஊழியர்கள் சென்று பார்த்தபோது படுக்கையில் மயங்கிய நிலையில் இருப்பதைக் கண்டனர். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மாரடைப்பால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதனிடையே, சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
Tags :