திமுக மாணவர் அணி நாளை தமிழகம் முழுவதும் அமைச்சர் பதவி விலக கண்டன ஆர்ப்பாட்டம்

by Admin / 28-06-2026 10:52:42pm
திமுக மாணவர் அணி நாளை தமிழகம் முழுவதும் அமைச்சர்  பதவி விலக  கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக மாணவர் அணி நாளை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் சரத்குமார் பதவி விலக வேண்டும் என்று கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளது. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டியின் போது அமைச்சர் சரத்குமார் மொபைல் போன் மீது வெள்ளை பொடியை வைத்து ஏடிஎம் கார்டு மூலமாக அதை கூட்டுவது போன்று ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தில் வெளியான நிலையில் பொது வெளியில் போதைப் பொருள் பயன்படுத்துவது போல் செயல்பட்ட அமைச்சரை திமுக மாணவர் அணி கடுமையாக கண்டனத்தை பதிவு செய்ததுள்ளதோடு அவர் உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திய நிலையில், அமைச்சர் தரப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தானும் தன் குடும்பத்தாரும் ஐபிஎல் போட்டிக்கு சென்ற பொழுது எடுக்கப்பட்ட வீடியோ என்றும் அப்பொழுது தன்னுடைய ஒன்றரை வயது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் மாத்திரையை பொடி செய்து கொடுப்பதற்காக மொபைல் போன் மீது வைத்து பொடி செய்ததாக விளக்கம் கொடுத்து உள்ளார். மீது போதைப் பொருள் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மருத்துவர்கள் அவர் தவறான உள்நோக்கத்துடன் காந்தி பரப்பப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

திமுக மாணவர் அணி நாளை தமிழகம் முழுவதும் அமைச்சர்  பதவி விலக  கண்டன ஆர்ப்பாட்டம்
 

Tags :

Share via
Logo