தமிழக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, சி .டி .ஆர் நிர்மல் குமார் மீது சபரீசன் நோட்டீஸ்
தமிழக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, சி .டி .ஆர் நிர்மல் குமார் மீது திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு. க .ஸ்டாலின் மருமகன் சபரீசன் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். கடந்த திமுக ஆட்சி காலத்தில் 32 துறைகளில் உதயநிதி ஸ்டாலினும் சபரிசனும் ஊழல் பணம் வசூலித்ததாக அமைச்சர் ஆதவ் அர்ச்சனா பொதுவெளியில் குற்றச்சாட்டை வைத்திருந்தார். மின்சாரத் துறை அமைச்சர் சி .டி .ஆர் நிர்மல் குமாரும் மின் கட்டண உயர்வு மூலம் சபரீசன் அதிக பணத்தை பெற்றதாகவும் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு சபரீசன் தான் எந்த ஒரு அரசு பொறுப்பிலோ அல்லது கட்சி பொறுப்புரோ இல்லை என்றும் உள்நோக்கத்திலும் உண்மைக்கு மாறாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அமைச்சர் பரப்பி வருவதாகவும் அதனால் தன்னைப் பற்றி ஊடகங்களில் வெளியிட்ட கருத்துக்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் எந்த ஊடகத்தில் பேட்டி அளித்தாரோ அந்த ஊடகங்கள் வாயிலாக நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற அவதூறுகளை பேச மாட்டோம் என எழுத்து பூர்வமாக உறுதி அளிக்க வேண்டும் என்றும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதோடு 15 நாட்களுக்குள் இரு அமைச்சர்களும் மன்னிப்பு கேட்க தவறினால் நீதிமன்றத்தில் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளை தொடர்ந்து சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
Tags :



















