டெல்லியில் மார்ச் 15- ஆம் தேதி த. வெ. க. தலைவர் விஜய் சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன்
டெல்லியில் மார்ச் 15 ஆம் தேதி த. வெ. க. தலைவர் விஜய் சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளது. 2025 செப்டம்பர் 27 அன்று கரூரில் தமிழக வெற்றிக்கழக நடத்திய அரசியல் மாநாட்டின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் .இந்த வழக்கை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகின்றது. மாநாட்டிற்கு திட்டமிட்ட நேரத்தை விட விஜய் சுமார் 7:00 மணி நேரம் தாமதமாக வந்ததாகவும் இதனால் கட்டுக்கடங்காத கூட்டம் சேர்ந்தது விபத்துக்கு காரணம் என்றும் சிபிஐ தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து அவரிடம் கூடுதல் விளக்கம் கூறப்பட்டுள்ளது. விஜய் ஏற்கனவே ஜனவரி 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜர் ஆகி விளக்கம் அளித்துள்ளார் .மார்ச் 10ஆம் தேதி ஆஜராகுமாறு முன்னதாக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், தேர்தல் பணிகள் மற்றும் வேட்பாளர் நேர்காணல் காரணமாக விஜய் தரப்பில் 15 நாட்கள் அவகாசம் கோரப்பட்டது . மேலும் விசாரணையை சென்னையில் நடத்துமாறும் கோரிக்கை வைக்கப்பட்டது .விஜய் தரப்பு அவகாச கோரிக்கை நிராகரித்த சிபிஐ வரும் 15-ஆம் தேதி காலை டெல்லி அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
Tags :


















