சுற்றுலா பஸ் விபத்து - பெண், சிறுவன் பலி

by Staff / 02-04-2023 12:52:55pm
சுற்றுலா பஸ் விபத்து - பெண், சிறுவன் பலி

கேரளா மாநிலம் திருச்சூரிலிருந்து வேளாங்கண்ணி குருத்தோலை ஞாயிறு நிகழ்வில் பங்கேற்பதற்காக, 51 பேர் சுற்றுலா பேருந்தில் சென்றனர். அந்த பேருந்து, தஞ்சாவூர் மாவட்டம் ஒக்கநாடு கீழையூர் அருகே வந்தபோது சாலையோர சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் லில்லி(63), ராயன்(9) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார். தொடர்ந்து அப்பகுதி மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஒரத்தநாடு போலீசார் விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories