தென்காசி சட்டமன்ற உறுப்பினரை சரமரியாக கேள்வி கேட்டநபரால் பரபரப்பு

தென்காசி பாவூர்சத்திரம் அடுத்து உள்ள ஆவுடையானூர் பகுதியில் இருந்து பாவூர்சத்திரம் மெயின் ரோடு சாலை வரை புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடங்கியது இந்த பணியை தென்காசி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் கீழப்பாவூர் ஒன்றிய குழு தலைவர் காவேரி சீனித்துரை கவுன்சிலர் ராம உதயசூரியன் உள்ளிட்டோர் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர் 5 கோடி மதிப்பீட்டில் 3 கிலோ மீட்டர் வரை தார் சாலை அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது இதன் இந்த நிலையில் நிகழ்வை தொடங்கி வைக்க வந்த சட்டமன்ற உறுப்பினரிடம் இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தாங்கள் இப்பொழுதுதான் வந்திருக்கிறீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது எம்எல்ஏ மற்றும் அங்கு கூடியிருந்த அரசியல் கட்சி நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் திடீரென அதிர்ச்சி அடைந்தார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வரை சமாதானம் செய்து அந்த பகுதியில் இருந்து அழைத்துச் சென்றனர் என் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. மேலும் கேள்வி கேட்ட நபர்களை அவரது ஆதரவாளர்கள் தாக்க முயற்சி மேற்கொண்ட காட்சிகளும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன எம்எல்ஏ மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளை சரமரியாக கேள்வி கேட்ட சமூக ஆர்வலருக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்
Tags :