ஆர்எஸ்எஸ் விழாவுக்கு நான் செல்லவில்லை - எஸ்.பி.வேலுமணி

by Editor / 23-06-2025 04:24:04pm
ஆர்எஸ்எஸ் விழாவுக்கு நான் செல்லவில்லை - எஸ்.பி.வேலுமணி

திமுக தனது தோல்விகளை மறைக்க நிகழ்ச்சியில் பங்கேற்றதை அரசியலாக்குகிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு முருகன் சிலையை வேலுமணி பரிசளித்தது தொடர்பான காட்சிகள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. இந்நிலையில், இன்று (ஜூன் 23) கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த வேலுமணி, பேரூர் ஆதீனத்தின் நூற்றாண்டு விழாவில்தான் கலந்துகொண்டேன். ஆர்எஸ்எஸ் விழாவிக்கு நான் செல்லவும் இல்லை, அவர்கள் என்னை அழைக்கவும் இல்லை என்றார்.

 

Tags :

Share via