தென்காசி மாவட்டகாங்கிரஸ் -திமுக அணிகள் கடும் போட்டி-காங்கிரஸ்.அமமுக கூட்டணி -களைகட்டும் தேர்தல் திருவிழா -குழப்பத்தில் வாக்காளர்கள்.

by Editor / 12-02-2022 03:57:02pm
தென்காசி மாவட்டகாங்கிரஸ் -திமுக அணிகள் கடும் போட்டி-காங்கிரஸ்.அமமுக கூட்டணி -களைகட்டும் தேர்தல் திருவிழா -குழப்பத்தில் வாக்காளர்கள்.

தென்காசி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் மற்றும் திமுக வுக்கு இடையே மோதல் வலுத்து உள்ளது. தொடர்ச்சியாக தென்காசி தெற்கு மாவட்டத்தை பொருத்தவரை சுரண்டை பேரூராட்சியில்
உள்ள 27 வார்டுகளில் 26 வார்டுகளில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. அதேபோன்று திமுகவும் இங்கு தனித்துப் போட்டியிடுகின்றது. அதிமுக,பாஜக  இரண்டு கட்சிகளும் கூட்டணி வைத்து பங்கீடு வைத்து போட்டியிடுகின்றன. 23வது வார்டு தவிர மற்ற 26  வார்டுகளிலும் காங்கிரஸ் கட்சி களத்தில் உள்ளது.
 சுரண்டையில் திமுகவை காங்கிரஸ் கட்சி நேருக்கு நேர் சந்திக்கிறது.எம்.எல்.ஏ பழனிநாடாரின் மகன் களத்தில் உள்ளதால்  முதல் நகராட்சியின் தலைவராக அவரை கொண்டுவருவதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.பழனிநாடார் தனது முழு பலத்தையும் தென்காசி மாவட்டத்தில் செலுத்தியுள்ளார்.அதே சமயம் பாலைநாடாருக்கு போட்டியாக திமுக தெற்குமாவட்ட செயலாளர் சிவபத்மநாபன் சுரண்டையில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் இதேபோன்று தென்காசி வடக்கு மாவட்டத்தில் கடையநல்லூர் நகராட்சியில்  திமுக வேட்பாளரை எதிர்த்து திமுக நகர செயலாளரே  இரண்டு வார்டுகளில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.செங்கோட்டை நகரத்தில் திமுக வேட்பாளர்களை எதிர்த்து சில வார்டுகளில்  முன்னாள் நகர்மன்ற திமுக உறுப்பினர்களாக இருந்தவர்களே சுயேட்சையாக போட்டியிடுகின்றனர்.தென்காசி நகராட்சியில் முன்னாள் திமுக நகர்மன்றத்தலைவரே திமுக வேட்பாளரை எதிர்த்து சுயேட்சையாக காலத்தில் குதித்துள்ளார்.

 இதேபோன்று சிவகிரி பேரூராட்சி பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து 15 வார்டுகளில் போட்டியிடுகின்றன. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை 2. 3. 4. 5. 12. 14. 18. ஆகிய 7 வார்டுகளிலும் போட்டியிடுகிறார்கள். இதே போன்று காங்கிரஸ் சார்பில் 6. 7. 8. 9 10. 11. 13. 15. ஆகிய எட்டு வார்டுகளிலும் போட்டியிடுகிறார்க. 3 வார்டுகளை தவிர மற்ற அனைத்து வார்டுகளிலும் இரண்டு கட்சியும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கின்றன.

 மேலும் காங்கிரஸ்,அமமுக இரண்டு கட்சி வேட்பாளர்களும் இரண்டு கட்சியினுடைய தலைமையின் படங்களை அச்சிட்டு வீடு வீடாக துண்டு பிரசுரங்களை வினியோகித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினுடைய கூட்டணியில் சிவகிரி பேரூராட்சி பகுதியிழும், சுரண்டை நகராட்சியில் காங்கிரஸ் தனித்தும்,செங்கோட்டை,தென்காசி,கடையநல்லூர்  நகராட்சிகளில் திமுக வேட்பாளர்களை எதிர்த்து திமுகவினர் காலத்தில் உள்ளதால் கடுமையான குழப்பத்தில் வாக்காளர்கள் உள்ளனர்.திமுகவில் கோஷ்டி பூசல் வலுத்துள்ளது.

தென்காசி மாவட்டகாங்கிரஸ் -திமுக அணிகள் கடும் போட்டி-காங்கிரஸ்.அமமுக கூட்டணி -களைகட்டும் தேர்தல் திருவிழா -குழப்பத்தில் வாக்காளர்கள்.
 

Tags : Congress-DMK teams face stiff competition-Congress-AIADMK alliance

Share via