by Staff /
10-07-2023
01:39:14pm
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸில், கணவர் வீட்டில் சாப்பிடாததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. கவுரிசங்கர் நகரை சேர்ந்த டிரைவர் சஞ்சீவ் என்பவரை கடந்த 2019ஆம் ஆண்டு சங்கீதா என்ற பெண் திருமணம் செய்து கொண்டார். மூன்று நாட்களுக்கு முன்பு சஞ்சீவ் தனது மனைவியுடனான தகராறில் வீட்டில் சாப்பிட மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த சங்கீதா ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.<br />
Tags :
Share via