by Staff /
05-07-2023
04:02:59pm
ஈரோடு காந்திஜி சாலை மற்றும் காளை மாட்டு சிலை உள்ளிட்ட பகுதிகளில் வண்டிகளில் மூலம் விற்பனை செய்யப்பட்டு வரும் பழகடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தங்கவிக்னேஸ் தலைமையிலான அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு மாம்பழங்கள், உள்ளிட்ட பல வகைகள் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்து. மேலும் அழுகிய பழங்களும் விற்பனை செய்யப்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து அழுகிய நிலையில் இருந்த பழங்கங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவற்றை அழித்தனர். மேலும் ரசாயனம் போட்டு பழுக்க வைக்கப்பட்ட பழங்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடைகள் மீது அபராதங்களும் விதித்தனர்.
Tags :
Share via