by Staff /
05-07-2023
04:07:31pm
கோவை பிரிவு சாலையில் கோபி மதுவிலக்கு காவல் நிலையஆய்வாளர் கலையரசி தலைமையில் ஐந்துக்கும் மேற்பட்ட காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை நிறுத்தி அவர்கள் ஓட்டி வந்த வாகனத்தை சோதனை செய்த போது அதில் ஒன்று புள்ளி 250 கிராம் எடையுள்ள கஞ்சாவை பொட்டலமாக சுற்றி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.இதனையடுத்து கஞ்சாவுடன் பிடிபட்ட மூவரையும் கைது செய்து கோபி மதுவிலக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்த போது பிடிபட்ட மூவரும் சவண்டப்பூர் அருகே உள்ள கணபதி பாளையத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.இதனையடுத்து கஞ்சாவுடன் பிடிபட்ட நாகராஜ், பலராமன் மற்றும் அன்பு ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்த மதுவிலக்கு போலீசார் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையிலடைத்தனர்.
Tags :
Share via