எட்டு மாத குழந்தைக்கு  உணவு தயாரித்த போது மின்சாரம் தாக்கி தாய்பலி.

by Editor / 13-04-2025 11:01:38am
எட்டு மாத குழந்தைக்கு  உணவு தயாரித்த போது மின்சாரம் தாக்கி தாய்பலி.

திருவாரூர் அருகே பின்னவாசல்ர் பகுதியில் அழகு திருநாவுக்கரசு என்பவர் வசித்து வருகிறார் இவர் விவசாய கூலி வேலை செய்கிறார் இவருக்கு சிந்துபைரவி என்ற பெண்ணோடு திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகின்றன. இந்த நிலையில் இந்த தம்பதியினருக்கு மூன்று வயதில் ஒரு மகனும், எட்டு மாதத்தில் ஓரு பெண் குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில் தனது எட்டு மாத பெண் குழந்தைக்கு தினமும் மிக்ஸியில் உணவை அரைத்து கொடுப்பது வழக்கமாக செய்து வந்துள்ளார். வழக்கம் போல தனது குழந்தைக்கு உணவு கொடுப்பதற்காக  சமையலறைக்கு சென்று மிக்சியில் சாதத்தை போட்டு அரைத்துள்ளார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக மிக்ஸியில் இருந்து மின்சாரம் தாக்கி சிந்து பைரவி மீது பாய்ந்து கீழே விழுந்துள்ளார்.

உடன் மயங்கி கிடந்த சிந்து பைரவியை பார்த்து கணவர் கத்தியுள்ளார் சத்தம் கேட்டதில் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர் சம்பவ இடத்திற்கு இந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சிந்து பைரவியை  பரிசோதித்தபோது ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து திருவாரூர் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தனது 8 மாத குழந்தைக்கு மிக்ஸியில் உணவு அரைக்கும் பொழுது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : எட்டு மாத குழந்தைக்கு  உணவு தயாரித்த போது மின்சாரம் தாக்கி தாய்பலி.

Share via