திமுக அளித்த வாக்குறுதிகளில் அஞ்சு சதவீதம் கூட நிறைவேற்றவில்லை-அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

by Admin / 29-12-2025 12:44:30am
 திமுக அளித்த வாக்குறுதிகளில் அஞ்சு சதவீதம் கூட நிறைவேற்றவில்லை-அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

மக்களை காப்போம் ,_தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை சோழிங்கநல்லூர் மற்றும் திருப்போரூர் தொகுதிகளில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில், திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டதாகவும் லஞ்சம் கொலை கொள்ளை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார் சிறுமி முதல் பாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பதில்லை என விமர்சித்த அவர் 2021 ஆம் ஆண்டு தேர்தலில் போதுcc என்றும் ஆனால் அதிமுக தனது ஆட்சிக் காலத்தில் 95 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதாகவும் கூறினார். 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என்ற வாக்குறுதியை திமுக நிறைவேற்ற தவறிவிட்டது என்றும் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதை 150 நாட்களாக உயர்த்தி ஊதியத்தையும் அதிகப்படுத்தும் என்றும் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை திமுக அரசு தற்போது தனது திட்டங்களாக பெயர் மாற்றி ஸ்டிக்கர் ஒட்டி வருவதாகவும் முதல்வர் ஸ்டாலின் அதிமுக ஆட்சியில் எதையுமே செய்யவில்லை என்று கூறுவதற்கு பதில் தன்னுடன் ஒரே மேடையில் நேருக்கு நேர் விவாதத்திற்கு வர தயாரா என்றும் சவால் விடுத்தார்.

 

Tags :

Share via

More stories