ஈரானின் ஐ ஆர் ஜி சி குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களை குறி வைத்து ஏவுகணைகளை ஏவியது.

by Admin / 02-06-2026 09:27:59am
ஈரானின் ஐ ஆர் ஜி சி குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களை குறி வைத்து ஏவுகணைகளை ஏவியது.

அமெரிக்கா- ஈரான் இடையே நேற்று ஏற்பட்ட வான்வழி மோதல்கள் இரு நாடுகளுக்கும் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தை பெரும் கேள்விக்குறிவாக்கியுள்ளது . அமெரிக்காவின் எம் கியூ ஒன்று பிரிடேட்டர் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. அமெரிக்க ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு பதிலடியாக அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள கெருக் நகரம் மற்றும் கெஷ்ம் தீவில் உள்ள இராணுவ தளங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. இந்த வான்வழி தாக்குதலில் ஈரானின் ரேடார் கட்டுப்பாட்டு மையங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஒரு தடை கட்டுப்பாட்டு நிலையம் மற்றும் கப்பல்களுக்கு அச்சுறுத்தலாக இந்த ஆளில்லா விமானங்கள் ஆகியவை முற்றிலும் அழிக்கப்பட்டன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பிறகு ஈரானின் ஐ ஆர் ஜி சி குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களை குறி வைத்து ஏவுகணைகளை ஏவியது. குவைத்தில் அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை பிரிவுக்கான முன்னோக்கிய படைத்தளம் அமைந்துள்ளது. குவைன் பாதுகாப்பு படையினரும் அமெரிக்க படைகளும் இணைந்து ஈரான் ஏவிய இரண்டு பாலிஸ்ட் ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் நடுவானிலேயே சுட்டு வீழ்த்தியது. இந்த தாக்குதலில் அமெரிக்க பரப்பில் யாருக்கும் எந்த விதமான காயங்களும் முயற்சி ஏற்படவில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via
Logo