இஸ்ரேல்  ஹிஸ்புல்லா அமைப்பினருடன் 900 ஆண்டுகள் பழமையான பியூக் போர்ட் கோட்டையை கைப்பற்றி உள்ளது.

by Admin / 02-06-2026 09:24:00am
இஸ்ரேல்  ஹிஸ்புல்லா அமைப்பினருடன் 900 ஆண்டுகள் பழமையான பியூக் போர்ட் கோட்டையை கைப்பற்றி உள்ளது.

லெபனானில் இஸ்ரேல் நடத்திய தீவிர ராணுவ தாக்குதல் மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றம் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. இஸ்ரேலிய படைகள் உடனடியாக லெபனானில் இருந்து வெளியேற வேண்டும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ள போதிலும் உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் விலைகள் இதன் காரணமாக உயர்ந்துள்ளன.ஹாா்முஸ் ஜலசந்தி பாப் எல் மண்டேப் ஆகிய கடல்சார் வழித்தடங்களை முழுமையாக முடக்கப்போவதாக ஈரான் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் அதன் காரணமாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன் யாஹூவுடன்  தொலைபேசி உரையாடலின் போது தம் அதிருப்தியை தெரிவித்ததாகவும் தகவல். பெய்ரூட் நகரின் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிய வருகிறது. இஸ்ரேலியா  ஹிஸ்புல்லா அமைப்பினருடன் கடுமையான போரிட்டு 900 ஆண்டுகள் பழமையான பியூக் போர்ட் கோட்டையை கைப்பற்றி உள்ளது. 1982ல் லெபனான் போரின் போது இக்கோட்டையை கைப்பற்றிய இஸ்ரேல் 18 ஆண்டுகள் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்து விட்டு கடந்த 2000 ஆவது ஆண்டில் அங்கிருந்து வெளியேறியது. தற்பொழுது இஸ்ரேல் தனது கொடியை அங்கே பறக்க விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via
Logo