மின்சாரம் தாக்கி மாணவர் மரணம்

by Staff / 20-09-2023 12:31:53pm
மின்சாரம் தாக்கி மாணவர் மரணம்

ஒடிசாவின் கட்டாக் நகரில் செவ்வாய்க்கிழமை விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு இடையே மின்சாரம் தாக்கி மாணவர் ஒருவர் உயிரிழந்தார். தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் விநாயகர் சிலையுடன் டிராக்டரில் ஊர்வலம் சென்றனர். அதில் ஒரு மாணவர் கையில் கொடியை ஏந்தியபடி, வீசிக்கொண்டே வந்தபோது அது 11 கே.வி., மின்சார வயரில் உரசியது. அப்போது மின்சாரம் தாக்கியதில் அந்த மாணவர் டிராக்டரில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் நான்கு பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via