அதிமுகவில் இருந்து விலகிய எம்எல்ஏ நான்கு பேருக்கு தகுதி நீக்க விவகாரம் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சட்டப்பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் நோட்டிஸ்
அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்களான மரகதம் குமரவேல், பி. சத்தியபாமா , ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகிய நான்கு பேருக்கு தகுதி நீக்க விவகாரம் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சட்டப்பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் நோட்டிஸ் அனுப்பி உள்ளார். நவம்பர் 10 ,11 ,12 ஆகிய தேதிகளில் இந்த நாலு பேரிடம் நேரில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விசாரணையின் போது, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் ஆஜராக பணிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் நவம்பர் 17ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெற்று பேரவை தலைவர் இந்த தகுதி நீக்க மனுக்கள் மீதான தம் இறுதி முடிவை அறிவிக்க உள்ளார். தமிழக வெற்றிக்கழக அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பின் பொழுது அதிமுக கொரடாவின் உத்தரவை மீறி 25 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்ததை தொடர்ந்து கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக கொறடா பேரவை தலைவரிடம் மனு அளித்திருந்தார். இந்நிலையில் 21 சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்த விளக்கத்தை ஏற்று அதிமுக புகாரை திரும்ப பெற்றது. ஆனால் ,நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். இதன் காரணமாக, இந்த நாலு பேர் மீதான தகுதி நீக்க புகாரை திரும்பப் பெறாத நிலையில் ,சென்னை உயர்நீதி மன்றத்திலும் கொறடா தரப்பு வழக்கு தொடுத்தது. சென்னை உயர்நீதிமன்றம் பேரவை தலைவர் ராஜினாமாவை ஏற்றது செல்லும் என்று தீர்ப்பு அளித்ததோடு அவர்கள் மீதான தகுதி நீக்கம் மனுக்கள் இரண்டு வாரத்திற்குள் இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டதை தொடர்ந்து பேரவை தலைவர்நோட்டிஸ் அனுப்பி உள்ளார்.
Tags :


















