திரை படங்களை அனுமதியின்றி ஆன்லைனில் வெளியிட்டால் 3 ஆண்டு சிறை: அமைச்சர் எல். முருகன்

பைரஸியால் சினிமாவின் வளர்ச்சி நாளுக்கு நாள் மோசமாகி வரும் நிலையில், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகன் திரை படங்களை அனுமதியின்றி ஆன்லைனில் வெளியிட்டால், குறைந்தபட்சம் 3 மாத சிறை மற்றும் ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், சிறைத்தண்டனையை 3 ஆண்டுகளுக்கும், அபராதத்தை படத்தயாரிப்பின் செலவில் 5% வரையும் நீட்டிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
Tags :