சாலை விபத்து ஒருவர் பலி

மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே மாங்குளம் சாலை சந்திப்பில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்தானது.இந்த விபத்தில் இரு சக்கர வாகனம் ஒட்டி வந்த 42 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். பின்னால் அமர்ந்து வந்த அவரது உறவினர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து அப்பன் திருப்பதி போலீசார் வழக்கு பதிவு செய்து இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags :