சர்ச்சை பேச்சு.. மன்னிப்பு கேட்டார் நிதிஷ் குமார்

பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார். நேற்றைய சட்டபேரவை நிகழ்வுகளின்போது பெண்கள் குறித்து நக்கலாக சர்ச்சைக்குரிய வகையில் நிதிஷ் பேசிய வீடியோ வைரலானது. அவருடைய இந்த பேச்சுக்கு பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து அவர், பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்த நிலையில், எனது பேச்சால் யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் மன்னித்து விடுங்கள் என கூறியுள்ளார்.
Tags :