பட்டாசு ஆலை வெடிவிபத்து 2 பேர் பலி - ஃபோர்மேன் கைது.

by Editor / 25-07-2023 09:03:13pm
 பட்டாசு ஆலை வெடிவிபத்து 2 பேர் பலி - ஃபோர்மேன் கைது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே தாயில் பட்டியில் சண்முகையா என்பவருக்கு சொந்தமான ஆர்.எஸ்.ஆர்.கேப் வெடி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் தொழிலாளர்கள் காலையில் வழக்கம் போல் கேப் வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தரையில் உராய்வு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டு பானு, முருகேஸ்வரி ஆகிய இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில், பட்டாசு ஆலை ஃபோர்மேன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஆலை உரிமையாளர் சண்முகையா, பங்குதாரர் மகேந்திரன் தலைமறைவான நிலையில் ஃபோர்மேன் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories