விண்ணப்பித்த 28 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த அரசு வேலை

by Staff / 26-10-2023 12:47:25pm
விண்ணப்பித்த 28 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த அரசு வேலை

உத்திரப் பிரதேச மாநிலத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பித்த 28 ஆண்டுகளுக்கு பின் வேலை கிடைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அங்கூர் குப்தா என்பவர் 1995ம் ஆண்டு தபால் பணிக்கு விண்ணப்பித்தார். 15 நாட்கள் பயிற்சிக்கு பின், தகுதியற்றவர் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்றத்தை அணுகி சாதகமான தீர்ப்பைப் பெற்றார். இதை எதிர்த்து தபால் துறை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததையடுத்து அவருக்கு பணி நியமனக் கடிதம் கிடைத்துள்ளது.

 

Tags :

Share via

More stories