by Staff /
06-07-2023
09:46:37am
அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்ட விரோத காவலில் வைத்துள்ளதாக அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று 3வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரணை நடத்துகிறார். நீதிபதிகள் உஷா பானு, பரத சக்ரவர்த்தி அமர்வு நேற்று முன்தினம் இரு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கிய நிலையில், குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில், 3வது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் ஜுன் 14ஆம் தேதி செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. தற்போது இதய அறுவை சிகிச்சைக்கு பின் காவேரி மருத்துவமனையில் அவர் உள்ளார்.
Tags :
Share via