by Staff /
06-07-2023
09:54:09am
இந்தியாவின் விண்வெளிப் புரட்சியில் லட்சிய திட்டமாக இருக்கும் சந்திரயான்-3 ஏவுகணைக்காக உலக நாடுகள் ஆவலுடன் காத்திருக்கின்றன. இந்த ஏவுகணை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இம்மாதம் 13ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. இந்த செயல்திட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன. இந்த விண்கலம் இரண்டு மாதங்கள் பயணம் செய்து நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும். அதன் பிறகு, நிலவு குறித்த ஆராய்ச்சியை தொடங்கும். இதற்காக இரவு பகலாக விஞ்ஞானிகள் உழைத்து வருகின்றனர்.
Tags :
Share via