கொலை வழக்கில் தாய் மற்றும் மகன் கைது
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தாண்டவராயபுரத்தில் கட்டிட தொழிலாளி கருப்பண்ணன் இவருக்கு மாரியம்மாள் என்கின்ற மனைவியும் ராஜா என்கின்ற மகனும் உள்ளனர். இவர்களுக்குள் சொத்து தகராறு ஏற்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கருப்பண்ணன் வீட்டில் இருந்தபோது ராஜா, மாரியம்மாள் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில் கருப்பண்ணனை ராஜா சரமாரியாக வெட்டினார். இதில்சம்பவ இடத்திலேயே கருப்பண்ணன் உயிரிழந்த நிலையில் இருவரும் தப்பி சென்றனர். இந்நிலையில் ஆத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இருவரையும் கைது செய்தனர்.
Tags :














.jpg)
.jpg)



