தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடகடலோர மாவட்டங்களில் காற்றுடன் கூடிய மழை

by Admin / 26-07-2026 11:47:21pm
 தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடகடலோர மாவட்டங்களில் காற்றுடன் கூடிய மழை

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடகடலோர மாவட்டங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை ,திருப்பூர், தேனி, திண்டுக்கல் ,தென்காசி போன்ற மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்  வட கடலோர தமிழக பகுதிகள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தமிழகத்தின் மற்ற உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் மழை பெய்யும் சமயங்களில் சில இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று அல்லது சூறாவளி காற்று வீசப்படும் என்றும் இடி ,மின்னல் மற்றும் பலத்த காற்று வீசும் போது பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

 தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடகடலோர மாவட்டங்களில் காற்றுடன் கூடிய மழை
 
Tags :

Share via

More stories

Logo