அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் தேரோட்டம்
சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் ஒன்பது நாளான இன்று ஆடித்தபின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு சிறப்பாக நடந்தது. திருத்தேரில் உற்சவர் கோமதி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார் காலை முதல் சிறப்பு பூஜைகளுடன் தொடங்கிய இந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர். நான்கு ரத வீதியிலும் வளம் வந்து மீண்டும் நிலைக்கு வந்தது விழாவின் மிக முக்கிய நிகழ்வான ஆடி தபசு செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது அன்று மாலை கோமதி அம்மனுக்கும் சிவபெருமான் சங்கரநாராயணன் ஆகவும் இரவில் சங்கரலிங்க சுவாமி ஆகவும் காட்சி அளிக்கும் முக்கிய நிகழ்வு நடைபெறும். ஆடி தவசை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
Tags :


















