பாக்கெட்டுகளில் அடைக்கப்படாத சமையல் எண்ணெய் விற்பனைக்கு மகாராஷ்டிரா அரசு தடை

by Admin / 22-08-2026 01:07:16am
பாக்கெட்டுகளில் அடைக்கப்படாத சமையல் எண்ணெய் விற்பனைக்கு மகாராஷ்டிரா அரசு தடை

பாக்கெட்டுகளில் அடைக்கப்படாத சமையல் எண்ணெய் விற்பனைக்கு மகாராஷ்டிரா அரசு தடை விதித்துள்ளது. சமையல் எண்ணெய்களை உதிரியாக அல்லது பாக்கெட்டுகளில் அடைக்கப்படாத நிலையில் விற்கக் கூடாது என்றும் அதனை வாங்குபவர்கள் அனைத்து எண்ணெய்களும் சீல் வைக்கப்பட்ட தரமான உணவுக்கானஎண்ணெய்யா?  என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்றும் பாக்கெட்டுகளில் என்னை தயாரிக்கப்பட்ட இடம் பாக்கெட் செய்யப்பட்ட தேதி காலாவதியாகும் தேதி எப். எஸ். எஸ் .ஏ. ஐ உரிமையின் போன்ற விபரங்களை தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும் என்றும் ஹோட்டல்கள் உணவகங்களில் ஒரு முறை பயன்படுத்திய எண்ணையை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதற்கும் பழைய தகர டப்பாக்களில் எண்ணெயை விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி  எண்ணையை விற்பனை செய்பவர்களுக்கு 10 லட்சம் வரை அபராதமும் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மிக மிதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சமையல் எண்ணெய் வாங்கும்போது அதன் சீல் மற்றும் லேபிள் விபரங்களை சரிபார்த்துக் கொள்ளப்பட வேண்டும்.பால், பன்னீர்  மற்றும் நெய் ஆகியவற்றில் நடக்கும் ரசாயனக் கலப்படங்களைக் கண்டறிய தீவிர சோதனைகள் உணவு பாதுகாப்பு -கலப்பட தடுப்பை உறுதி செய்யும் நோக்கில் எப். டி .ஏ இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo