ஜப்பான் வடக்கு இவாட் மாகாண கடற்கரை பகுதியில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.

by Admin / 09-11-2025 04:06:57pm
ஜப்பான் வடக்கு இவாட் மாகாண கடற்கரை பகுதியில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.

ஜப்பான் வடக்கு இவாட் மாகாண கடற்கரை பகுதியில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது., சுமார் பத்து சென்டிமீட்டர் அளவிலான சிறிய சுனாமிகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கடலோர பகுதியில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.. ஜப்பான் வானிலை ஆய்வு மையம் இவாட் கடற்கரையில் ஒரு மீட்டர் உயரம் வரை அலைகள் எழும்பக் கூடும் என்றும் ஒக் புனாடோ நகரம் மற்றும் ஓமினா டோ துறைமுகத்தில் 10 சென்டிமீட்டர் சிறிய சுனாமி அலை எழலாம் என்றும் இவ் நிலநடுக்கத்தை தொடர்ந்து மிதமான நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டன என்றும் இது 6.4,,5.6 மற்றும் 5.2 ட்டர் அளவிலான நிலநடுக்கங்களும் ஏற்பட்டுள்ளன.. பெரும் சேதம் பற்றியோ- உயிரிழப்பு பற்றியோ தகவல்கள் இல்லை.. இது குறித்து அசாதாரணமான எந்த சம்பவங்களும் பதிவாகவில்லை.. புல்லட் ரயில்கள் தாமதமாக இயங்கின... ஜப்பானிய அதிகாரிகள் தொடர்ந்து நிலைமைகளை கண்காணித்து வருகின்றனர்.. அதிக நில நடுக்கம் ஏற்படும் பகுதிகளில் பின் அதிர்வுகள் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via