பிப்ரவரி 6 (February 6)
கிரிகோரியன் ஆண்டின் 37 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 328 (நெட்டாண்டுகளில் 329) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
60 – கிழமை முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. பொம்பெயியில் கண்டெடுக்கப்பட்ட சுவரடி ஓவியம் ஒன்று இந்நாளை ஞாயிற்றுக் கிழமையாகக் காட்டியது.
1658 – சுவீடன் மன்னன் பத்தாம் குஸ்டாவின் படைகள் உறைந்த கடலைத் தாண்டி டென்மார்க்கை அடைந்தன.
1685 – இரண்டாம் சார்லசு மன்னரின் இறப்பை அடுத்து அவரது சகோதரர் இரண்டாம் யேம்சு ஐக்கிய இராச்சியத்தின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1788 – மாசச்சூசெட்ஸ் ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட 6-வது மாநிலமானது.
1792 – மூன்றாவது ஆங்கிலேய-மைசூர் போர்: சீரங்கப்பட்டினம் முற்றுகையின் போது திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டார்.[1]
1806 – கரிபியனில் நடந்த சான் டொமிங்கோ சமரில் பிரித்தானியக் கடற்படை பிரெஞ்சுப் படைகளை வென்றது.
1819 – சேர் இசுடாம்போர்டு இராஃபிள்சு என்பவரால் சிங்கப்பூர் அமைக்கப்பட்டது.
1820 – முதல் தொகுதி 86 ஆபிரிக்க அமெரிக்கர்கள் லைபீரியாவில் குடியேற்றத்தை ஆரம்பிப்பதற்காக நியூயார்க்கில் இருந்து புறப்பட்டனர்.
1840 – நியூசிலாந்தில் வைத்தாங்கி ஒப்பந்தம் பிரித்தானிய அரச பிரதிநிதியாலும், மவோரி தலைவர்களாலும் எட்டப்பட்டது. பிரித்தானியக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டது.
1851 – ஆத்திரேலியாவின் வரலாற்றில் மிகப் பெரும் காட்டுத்தீ விக்டோரியா மாநிலத்தில் பரவியது. 12 பேர் உயிரிழந்தனர்.
1863 – இலங்காபிமானி (Ceylon Patriot) இதழ் யாழ்ப்பாணத்தில் டபிள்யூ. சி. கதிரவேற்பிள்ளை என்பவரால் வெளியிடப்பட்டது.[2]
1899 – எசுப்பானிய அமெரிக்கப் போர்: அமெரிக்காவுக்கும் எசுப்பானியாவுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட பாரிஸ் உடன்படிக்கை (1898) அமெரிக்க மேலவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1900 – நிரந்தர நடுவர் நீதிமன்றம் நெதர்லாந்தில் டென் ஹாக் நகரில் நிறுவப்பட்டது.
1918 – 30 வயதிற்கு மேற்பட்ட குறைந்தபட்ச சொத்துரிமை கொண்ட பிரித்தானியப் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
1951 – கனடிய இராணுவம் கொரியப் போரில் இறங்கியது.
1951 – அமெரிக்காம், நியூ ஜேர்சியில் பயணிகள் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 85 பேர் உயிரிழந்தனர், 500 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
1952 – ஆறாம் ஜோர்ஜின் இறப்பை அடுத்து இரண்டாம் எலிசபெத் ஐக்கிய இராச்சியம் உட்பட பொதுநலவாய நாடுகளுக்கு அரசியானார்.
1958 – செருமனி, மியூனிக்கில் இடம்பெற்ற விமான விபத்தில் மான்செஸ்டர் யுனைட்டட் உதைபந்தாட்ட அணியின் 8 பேர் உயிரிழந்தனர்.
1959 – டெக்சாசு இன்ஸ்ட்ருமெண்ட்சு நிறுவனத்தைச் சேர்ந்த ஜாக் கில்பி தொகுசுற்றுக்கான முதலாவது காப்புரிமத்தைப் பெற்றார்.
1959 – கண்டம் விட்டுக் கண்டம் பாயும் முதலாவது டைட்டான் ஏவுகணை புளோரிடாவில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.
1978 – அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து பகுதியை வரலாறு காணாத இடம்பெற்ற பனிப்புயல் தாக்கியது.
1989 – போலந்தில் ஆரம்பமான வட்டமேசை மாநாட்டில், கிழக்கு ஐரோப்பாவில் இருந்து கம்யூனிச ஆட்சிகளைக் கவிழ்ப்பது குறிந்து ஆராயப்பட்டது.
1996 – அட்லாண்டிக் பெருங்கடலில் டொமினிக்கன் குடியரசுக் கரைகளில் போயிங் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 189 பேரும் உயிரிழந்தனர்.
2000 – உருசியா குரோசுனி, செச்சினியா ஆகியவற்றைக் கைப்பற்றியது.
2004 – மாஸ்கோவில் சுரங்க தொடருந்து நிலையம் ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர்.
2016 – தாய்வான் நிலநடுக்கத்தில் 117 பேர் உயிரிழந்தனர்.
பிறப்புகள்
1465 – டெல் ஃபெர்ரோ, இத்தாலியக் கணிதவியலாளர் (இ. 1526)
1665 – பெரிய பிரித்தானியாவின் அரசி ஆன் (இ. 1714)
1814 – காரல் கிரவுல், தமிழகத்தில் மறை, தமிழ்ப் பணியாற்றிய செருமனியக் கிறித்தவப் பாதிரியார் (இ. 1864)
1879 – மாண்டேகு, ஆங்கிலேய அரசியல்வாதி, பிரித்தானியாவின் இந்தியாவுக்கான செயலாளர் (இ. 1924)
1884 – அரங்கசாமி நாயக்கர், புதுவை விடுதலைப் போராட்ட வீரர், தமிழறிஞர் (இ. 1943)
1890 – கான் அப்துல் கப்பார் கான், பாக்கித்தானிய அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1988)
1892 – வில்லியம் பாரி மர்பி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (இ. 1987)
1911 – ரானல்ட் ரேகன், ஐக்கிய அமெரிக்காவின் 40வது அரசுத்தலைவர் (இ. 2004)
1912 – இவா பிரான், இட்லரின் மனைவி (இ. 1945)
1921 – சாலமன் பிக்கெல்னர். உருசிய-சோவியத் வானியலாளர் (இ. 1975)
1923 – எட்வார்டு எமர்சன் பர்னார்டு, அமெரிக்க வானியலாளர் (பி. 1857)
1932 – சங்கர் கோசு, இந்திய வங்கக் கவிஞர்
1935 – மாரி. அறவாழி, தமிழக எழுத்தாளர் (இ. 1999)
1945 – பாப் மார்லி, ஜமைக்கா பாடகர், கித்தார் இசைக்கலைஞர் (இ. 1981)
1956 – பிறைசூடன், தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர், நடிகர்
1975 – ஆர்க்குட் புயுக்கோக்டன், ஆர்க்குட் சமூக வலையமைப்பைக் கண்டுபிடித்த துருக்கியர்
1983 – சிறிசாந்த், இந்தியத் துடுப்பாளர்
1986 – டேன் டிஹான், அமெரிக்க நடிகர்
இறப்புகள்
1685 – இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு (பி. 1630)
1804 – சோசப்பு பிரீசிட்லி, ஆங்கிலேய வேதியியலாளர் (பி. 1733)
1827 – சியாமா சாஸ்திரிகள், கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (பி. 1762)
1918 – கஸ்டவ் கிளிம்ட், ஆத்திரிய ஓவியர் (பி. 1862)
1920 – வின்சென்ட் ஸ்மித், அயர்லாந்து இந்தியவியலாளர், வரலாற்றாளர் (பி. 1843)
1923 – எட்வார்டு எமர்சன் பர்னார்டு, அமெரிக்க வானியலாளர் (பி. 1857)
1931 – மோதிலால் நேரு, இந்திய அரசியல்வாதி (பி. 1861)
1952 – ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ் (பி. 1895)
1964 – எமிலியோ அகுயினால்டோ, பிலிப்பீன்சின் 1வது அரசுத்தலைவர் (பி. 1869)
1973 – ஐரா சுப்பிரேகு போவன், அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1898)
சிறப்பு நாள்
வைத்தாங்கி நாள் (நியூசிலாந்து நிறுவிய நாள், 1840).
Tags :