நான் திராவிடர்தான்: பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்

நான் நீங்கள் உட்பட தென்னிந்தியாவில் இருக்கக் கூடிய அனைவருமே திராவிடர்தான் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார். திராவிடம் குறித்த கேள்விக்கு, 'தென்னிந்தியாவின் நிலப்பரப்புதான் திராவிடம். இங்கு இருக்கிற மக்கள் அனைவருமே திராவிடர்கள்தான்' என விளக்கம் கொடுத்துள்ளார். மேலும், கல்வி குறித்த கேள்விக்கு, 'கல்வியில் தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்களை, ஒடிஷா, பீகார் போன்ற வளர்ச்சி குறைந்த மாநிலங்களுடன் ஒப்பிடக்கூடாது' என்றார்.
Tags :