காஞ்சிபுரம் டி எஸ் பி ஐ கைது செய்ய உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி செம்மல் பணியிடைநீக்கம்
காஞ்சிபுரம் டி எஸ் பி ஐ கைது செய்ய உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி செம்மல் பணியிட மாற்றம் செய்யப்பட்டு பின்னர் பணியிடை நீக்கம் செய்து சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் உத்தரவு. காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதியாக இருந்த செம்மல் வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.. இந்த உத்தரவை எதிர்த்து டிஎஸ்பி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் டிஎஸ்பிஐ கைது செய்த உத்தரவு ஐத்து செய்தவுடன் நீதிபதி செம்மல் தனது அதிகாரத்தை தனிப்பட்ட விரோதத்திற்காக பயன்படுத்தியது விசாரணையில் தெரிய வந்ததாக குறிப்பிட்டது. ஆரம்ப கட்ட விசாரணையைத் தொடர்ந்து நீதிபதி செம்மல் காஞ்சிபுரத்தில் இருந்து அரியலூர் மாவட்ட லோக் அதால தலைவராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். உயர்நீதிமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழுவின் விரிவான விசாரணைக்கு பிறகு நீதிபதி செம்மலை பணியிடைநீக்கம் செய்து சென்னை உதய நீதிமன்ற தலைமை பதிவாளர் அள்ளி உத்தரவிட்டு உள்ளார். நீதித்துறை அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Tags :


















