பிரதமர் மோடி மீது செல்போனை வீசிய பெண்

கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி மீது பெண் ஒருவர் மொபைல் போனை வீசினார். மைசூரில் நேற்று முன்தினம் சாலையில் நடந்த பிரம்மாண்ட பேரணியில் பங்கேற்ற மோடி, வாகனத்தில் நின்றபடி சென்றார். அப்போது இருபுறமும் நின்றிருந்த பாஜக தொண்டர்கள் மோடி மீது மலர்களை தூவி வரவேற்பளித்தனர். அச்சமயத்தில் திடீரென கூட்டத்திலிருந்து ஒரு செல்போன் மோடியை நோக்கி வீசப்பட்டது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பெண் தொண்டர் ஒருவர் பிரதமரை பார்த்த உற்சாகத்தில் மலர்களுடன் சேர்ந்து தவறுதலாக செல்போனை வீசியது தெரியவந்துள்ளது.
Tags :