அதிகரிக்கும் ரயில் விபத்துக்கள்-அதிர்ச்சியில் அதிகாரிகள்

இந்தாண்டு நாட்டில் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற ரயில் விபத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த சிலதினங்களுக்கு முன்னர் ஆந்திர மாநிலம், விஜயநகரில் ரயில்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் மீண்டும் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் ரயில் நிலையம் அருகே சுஹைல்தேவ் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது. நேற்று இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் இன்ஜின் உட்பட மேலும் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன. ஆனால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.தொடர்ச்சியாக நடந்துவரும் ரயில்விபத்துக்களுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இந்த சம்பவங்களால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Tags : அதிகரிக்கும் ரயில் விபத்துக்கள்-அதிர்ச்சியில் அதிகாரிகள்