காதலுக்கு எதிர்ப்பு.. ஆட்டோவில் தற்கொலை செய்துகொண்ட ஜோடி

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில், காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஆட்டோவில் காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டது. மணவள்ளியைச் சேர்ந்த ராகவேந்திர ஜாதவ் (28) மற்றும் ரஞ்சிதா (26) ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. காதலுக்கு மறுப்பு தெரிவித்த பெற்றோர் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடத்தியுள்ளனர். இதனால் ஏற்பட்ட விரக்தியில், அப்பெண் தனது காதலனுடன் சேர்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
Tags :