தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி-தமன்னா

by Editor / 24-07-2021 08:24:55pm
தொலைக்காட்சி நிகழ்ச்சியில்  விஜய்சேதுபதி-தமன்னா

சினிமாவில் மார்க்கெட்டை இழந்தவர்கள் தான் டிவி பக்கம் செல்வார்கள் என்ற ஒரு இமேஜை உடைத்து, கமல்ஹாசன், சரத்குமார், சூர்யா, ஆர்யா, அரவிந்த்சாமி, பிரகாஷ் ராஜ், விஷால் என பலரும் டிவி பக்கம் பெரிய ஷோக்களை தொகுத்து வழங்கினார்கள்.


அந்த வரிசையில் சன்டிவியில் விஜய் சேதுபதி, ‘மாஸ்டர் செப்’ என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உள்ளார்
இந்நிகழ்ச்சியை கன்னடத்தில் ‘நான் ஈ’ சுதீப்பும், தெலுங்கில் தமன்னாவும் தொகுத்து வழங்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.சமையலை மையமாக கொண்ட விஜய் டிவியின் குக் வித் கோமாளிக்கு நிகழ்ச்சி ஹிட்டான நிலையில் மாஸ்டர் செப் நிகழ்ச்சியும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், மாஸ்டர் செப் நிகழ்ச்சிக்கான ப்ரமோ சூட் நடைபெற்றது. இதில் விஜய்சேதுபதியும் தமன்னாவும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.

 

Tags :

Share via

More stories

Logo