விதிமீறி இயங்கிய 4 கடைகளுக்கு சீல்
வேலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளின் அருகே அரசின் விதியை மீறி பெட்டிக் கடைகள் இயங்குவதாக ஆட்சியர் குமாரவேல் பாண்டியனுக்கு புகார்கள் சென்றன. அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.அதையடுத்து வேலூர் கோட்ட டாஸ்மாக் மேலாளர் பூங்கொடி, வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் மற்றும் அலுவலர்கள் காட்பாடி, திருவலம், பொன்னை, சேர்க்காடு, அணைக்கட்டு, மோட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளின் அருகே திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் கட்டிடத்தில் உள்ள கடைகள், பெட்டிக் கடைகள் என்று மொத்தம் 13 கடைகள் விதியை மீறி இயங்குவது தெரியவந்தது. இதையடுத்து கட்டிடத்தில் உள்ள 4 கடைகளை பூட்டி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.பெட்டிக்கடைகாரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக 13 பேர் மீது மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Tags :