EDக்கு சம்மட்டி அடி.. உச்சநீதிமன்ற தீர்ப்பால் RS பாரதி பெருமிதம்

டாஸ்மாக்கில் நடந்த அமலாக்கத்துறை சோதனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச்செயலாளர் & MP ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், "அமலாக்கத்துறையின் அக்கப்போருக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை திமுக வரவேற்கிறது. மத்திய அரசு EDஐ தவறாக பயன்படுத்துகிறது. பிளாக்மெயில் நிறுவனம் போல ED செயல்படுகிறது. திமுக அரசின் மீது களங்கம் உண்டாக்கவே ED சோதனை நடந்தது" என பேசினார்.
Tags :