கோழிகளை திருடச் சென்று மலைப்பாம்பு சிக்கியது.
தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான செங்கோட்டை தாலுகா கட்டளை குடியிருப்பு
பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து தண்ணீர் வரும் நீரோடைகள் நதிகள் உள்ளிட்டவைகள் உள்ளன இந்த நிலையில் இன்று காலை அம்மன் கோவில் பகுதியைச் சார்ந்த கார்த்திக் என்பவர் வீட்டில் அடிக்கடி கோழிகள் காணாமல் போனதை தொடர்ந்து அவர் இன்று காலை கண்காணிக்கவே அவரது வீட்டு அருகில் உள்ள பெரிய ஓடையில் இருந்து பத்தடி நீளமுள்ள ராட்சச மலைப்பாம்பு ஒன்று கோழிகளை பிடிப்பதற்காக ஊர்ந்து சென்றதை கவனித்த அவர் செங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே சிறப்பு நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் வீரர்கள் சந்திரமோகன், ஆல்பர்ட், ராம்குமார் கோமதிசங்கர் , மணிகண்டன், சண்முகவேல் ஆகியோர் அடங்கிய குழுவினர்களுடன் மலைபாம்பு உயிருடன் பிடிக்கப்பட்டது . வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.
Tags : கோழிகளை திருடச் சென்று மலைப்பாம்பு சிக்கியது.