கனமழையால் ரயில்வே சுரங்க பாதையில் தேங்கிய நீரில் சிக்கிய பள்ளி மாணவர்கள் வாகனம்

by Editor / 25-08-2022 11:01:47pm
கனமழையால் ரயில்வே சுரங்க பாதையில் தேங்கிய நீரில் சிக்கிய பள்ளி மாணவர்கள் வாகனம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் இன்று காலை முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இருப்பினும் மாலையில் பலத்த மழை பெய்ததது. சுமார் 1மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையின் காரணமாக இளையரசனேந்தல் ரெயில்வே சுரங்கபாலத்தின் கீழே உள்ள பாதையில் மழை நீர் தேங்கியது. அப்போது அந்த வழியாக வந்த  கோவில்பட்டி ஏ.விமேல் நிலைப்பள்ளி வாகனம் மழைநீரில் சிக்கியது. அதில் சென்ற குழந்தைகள் கதறினார். இந்த கதறல் சத்தத்தினை கேட்ட அருகில் இருந்த மக்கள் விரைந்து சென்று குழந்தைகளை காப்பாற்றினர். கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக ஒவ்வொரு முறையும் பெய்யும் கன மழையினால் சுரங்கபாலத்தில் வாகனங்கள் சிக்கி கொள்வது தொடர்கதையாக இருந்துவருகிறது.இணைப்பு சாலை மற்றும் வாறுகால் எவையும் அமைக்கவில்லை என்பதால் மழைநீர் சுரங்கபாலத்தில் புகுந்து தேங்கி விடுகிறது.அப்படி தேங்கியநீரில்தான் இன்று பள்ளிக்குழந்தைகள் சிக்கிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags :

Share via

More stories

Logo