வார விடுமுறை மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு

by Editor / 14-09-2023 10:12:20pm
வார விடுமுறை மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு

 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக நெரிசல்மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை, நாளை மட்டும் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நீட்டிக்கப்பட்ட நெரிசல்மிகு நேரங்களில் இரவு 8 மணி முதல் 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவைகள் இரண்டு வழித்தடத்திலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்த அறிவிப்பு பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

 

Tags : வார விடுமுறை மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு

Share via

More stories